மீண்டும் ``லூசிபர்'' கூட்டணி - பிரித்விராஜ் படத்தில் நடிக்கும் மோகன்லால்


Mohanlal act in Prithviraj film again
x

இப்படத்தில் தான் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக மோகன்லால் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

சென்னை,

வைஷாக் இயக்கத்தில், ஜினு ஆபிரகாம் தயாரிப்பில், பிரித்விராஜ் நடிக்கும் புதிய மலையாளப் படம் `கலீபா- ’தி பிளட் லைன்’. இப்படம் ’தி இண்ட்ரோ’ மற்றும் ’ஹிஸ் ரீஜியன்’ என இரு பாகங்களாக வெளியாகவுள்ளது. முதல் பாகமான ’தி இண்ட்ரோ’ அடுத்த ஆண்டு ஓணம் அன்று பெரிய அளவில் வெளியாக உள்ளது.

போக்கிரி ராஜா படத்தின் வெற்றிக்கு பின் பிரித்விராஜும் வைஷாக்கும் இந்தப் படத்தில் இணைந்திருக்கிறார்கள். இந்நிலையில், இப்படத்தில் தான் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக மோகன்லால் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். ``லூசிபர்'' கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

மறுபுறம், பிரித்விராஜ், எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் பான் இந்திய படமான வாரணாசியிலும் நடித்து வருகிறார்.

1 More update

Next Story