லாஸ் ஏஞ்சல்ஸ் இந்திய திரைப்பட விழாவில் திரையிடப்படும் மம்முட்டி - மோகன்லாலின் “பேட்ரியாட்”

மம்முட்டி, மோகன்லால் இணைந்து நடிக்கும் ‘பேட்ரியாட்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 23-ம் தேதி வெளியாக உள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸ் இந்திய திரைப்பட விழாவில் திரையிடப்படும் மம்முட்டி - மோகன்லாலின் “பேட்ரியாட்”
Published on

மலையாள திரையுலகின் ஜாம்பவான் நடிகர்களான மம்முட்டி மற்றும் மோகன்லால் இணைந்து நடிக்கும் புதிய படம் ‘பேட்ரியாட்’ . மகேஷ் நாராயணன் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்துள்ளது. இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் பகத் பாசில், ரேவதி, நயன்தாரா, கிரேஸ் ஆண்டனி, தர்ஷனா ராஜேந்திரன், ராஜீவ் மேனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில்,‘பேட்ரியாட்’ படம் லாஸ் ஏஞ்சல்ஸ் இந்திய திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது.

இந்திய திரைப்பட விழா ஏப்ரல் 23 முதல் 26ஆம் தேதி வரை லாஸ் ஏஞ்சலீஸில் நடைபெற இருக்கிறது. 27 தெற்காசிய திரைப்படங்கள் இந்தமுறை அமெரிக்காவில் திரையிடப்படுகின்றன. இந்த விழாவில் 18 குறும்படங்கள், இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், மலேசியா, பிலிப்பின்ஸ், ஜப்பான், பிரிட்டன், நெதர்லாந்து, ஜெர்மனி மற்றும் அமெரிக்க படங்கள் திரையிடப்படுகின்றன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com