

சென்னை
பிரபல மலையாள நடிகர் மோகன்லால் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அப்போது பல்வேறு விசயங்கள் குறித்து மோடியுடன் மோகன்லால் பேசினார்.
தனது விஷ்வசாந்தி அறக்கட்டளையால் சமுதாயத்தில் உடல்நலம் மற்றும் கல்வித் துறையின் நலன்களை மேம்படுத்துவதற்கான சமூக முயற்சிகளைப் பற்றி அவர் விளக்கி உள்ளார்.
இந்த சந்திப்பு குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டரில்...
நேற்று மோகன்லால் ஜி உடன் அற்புதமான ஒரு சந்திப்பு நிகழ்ந்தது. அவரது பரந்த சமூக சேவை முயற்சிகள் கவனிக்கத்தக்க மற்றும் ஈர்க்கக்கூடிய வகையில் அமைந்துள்ளது என பிரதமர் மோடி தனது டுவிட்டரில் கூறி உள்ளார்.
மோகன்லால் பிரதமர் மோடியுடன் தனது சந்திப்பு குறித்து டுவிட்டரில் புதிய கேரளாவை உருவாக்க பிரதம மந்திரி தனது ஆதரவை உறுதிப்படுத்தினார் என கூறி உள்ளார். அவர் அனைத்து ஆதரவையும் உறுதிப்படுத்தி, ஒரு புதிய கேரளாவுக்கான எதிர்கால தீர்வுகளை உருவாக்கும் உலகளாவிய மலையாளி ரவுண்ட் டேபிளில் பங்கேற்க முன்வந்தார் என கூறி உள்ளார்.
மோகன்லாலின் நீரலை படம் ஜூலை மாதம் வெளிவந்து கலவையான விமர்சனத்தை பெற்றது. மேலும் மோகன்லால் தற்போது நடிகர் சூர்யாவின் 37 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பெரும் பகுதி லண்டனில் படமாக்கப்பட்டு உள்ளது.
மோகன்லாலின் ஓடியன், காயம்குளம் கொச்சுண்ணி, டிராமா அண்டு லூசிபர் ஆகியவை தயாரிப்பில் உள்ளன.