இயக்குனராக களமிறங்கும் மோகன்லால்.. 3 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான அறிவிப்பு...!

நடிகராக திரையுலகில் கலக்கிய மோகன்லால் தற்போது இயக்குனராக களமிறங்கியுள்ளார்.
இயக்குனராக களமிறங்கும் மோகன்லால்.. 3 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான அறிவிப்பு...!
Published on

சென்னை,

மலையாள திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் மோகன்லால். இவர் ஜில்லா, இருவர், காப்பான் போன்ற தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'ஜெயிலர்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து கவனம் ஈர்த்தார். இவர் தற்போது மலையாளத்தில் மலைக்கோட்டை வாலிபன், லூசிபர் 2 போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகராக திரையுலகில் கலக்கிய மோகன்லால் தற்போது இயக்குனராக களமிறங்கியுள்ளார். அதுகுறித்த அறிவிப்பை நேற்று புத்தாண்டு தினத்தில் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 'பாரோஸ்' என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை 3டி தொழில்நுட்பத்தில் உருவாக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த படம் லிஜொ புன்னோஸ் எழுதிய 'பரோஸ்: கார்டியன் ஆப் தி காமா'ஸ் டிரெசர்' என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட உள்ளது. இந்த படம் குறித்த அறிவிப்பு கடந்த 2019ம் ஆண்டே வெளியான நிலையில் கொரோனா பெருந்தொற்று காரணமாக படபிடிப்பு தள்ளிப்போனது. இந்நிலையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு படம் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com