வீட்டில் 10 யானை தந்தங்கள், 13 தந்தச் சிலைகள் இருப்பதாக அறிவித்த மோகன்லால்

நடிகர் மோகன்லால் தனது வீட்டில் 10 யானை தந்தங்கள் மற்றும் 13 தந்தங்களால் செய்யப்பட்ட சிலைகள் இருப்பதாக வனத்துறைக்கு தகவல் அளித்துள்ளார்.
நடிகர் மோகன்லால்
Published on

திருவனந்தபுரம்,

கேரளாவில் சட்டவிரோதமாக வீடுகளில் வைத்திருக்கும் யானை தந்தங்கள் மற்றும் வனவிலங்கு சார்ந்த பொருட்கள் குறித்து பொதுமக்கள் தாங்களாகவே தகவல் அளித்தால், அவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளில் இருந்து விலக்கு வழங்கப்படும் என மாநில வனத்துறை சமீபத்தில் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பின் அடிப்படையில், நடிகர் மோகன்லால் தனது வீட்டில் 10 யானை தந்தங்கள் மற்றும் 13 தந்தங்களால் செய்யப்பட்ட சிலைகள் இருப்பதாக வனத்துறைக்கு தகவல் அளித்துள்ளார்.

பரிசாகவும் பாரம்பரிய சொத்தாகவும் கிடைத்தவை என விளக்கம்

இதுகுறித்து மோகன்லால் அளித்துள்ள விளக்கத்தில், தனது வீட்டில் உள்ள யானை தந்தங்களும் தந்தச் சிலைகளும் தனக்கு பரிசாக கிடைத்தவை மற்றும் குடும்ப பாரம்பரியமாக வந்தவை என்றும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக மோகன்லால் வீட்டில் இருந்த 4 யானை தந்தங்கள் தொடர்பாக வனத்துறை வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், தற்போது கூடுதலாக 6 யானை தந்தங்கள் இருப்பதையும் அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பது கவனம் ஈர்த்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com