குடும்பத்தினருடன் நேரில் சென்று மோகன்லாலை சந்தித்த பகத் பாசில்

மோகன்லாலின் 'ஹிருதயப்பூர்வம்' படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குடும்பத்தினருடன் நேரில் சென்று மோகன்லாலை சந்தித்த பகத் பாசில்
Published on

சத்யன் அந்திக்காட் இயக்கத்தில் மோகன்லால் 'ஹிருதயப்பூர்வம்' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.இப்படத்தில் சங்கீதா, சித்திக், சங்கீத் பிரதாப், நிஷான், லாலு அலெக்ஸ், ஜனார்த்தனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அகில் சத்யன் வசனம் எழுத, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.

'ஹிருதயப்பூர்வம்' படத்தின் டீசர் காட்சியில் ஒருவர், "மலையாளத்தில் எனக்கு பிடித்த நடிகர் பகத் பாசில்தான். என்ன ஒரு நடிகர்" என மோகன்லாலிடம் சொல்கிறார். அதற்கு மோகன்லால், "ஆனால், இன்னும் மூத்த நடிகர்கள் இருக்கிறார்கள்" என்கிறார். அதற்கு, 'இல்லை. பகத் மட்டும்தான்" என அவர் சொல்ல, நகைச்சுவையாக மோகன்லால் அந்தக் கதாபாத்திரத்தைக் கடந்து செல்கிறார். இது ரசிகர்களிடம் படத்தின் மீதான ஆவலை அதிகரித்துள்ளது. மோகன்லாலின் 'ஹிருதயப்பூர்வம்' படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் மோகன்லாலின் இந்த பெருந்தன்மைக்காக தனது மனைவி நஸ்ரியா, சகோதரர் பர்ஹான் பாசில் ஆகியோருடன் மோகன்லாலின் வீட்டிற்கு நேரில் சென்று அவருக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார் பகத் பாசில். இந்த சந்திப்பின்போது மோகன்லாலின் மனைவியும் மகன் நடிகர் பிரணவும் உடன் இருந்தனர்.

மேலும் பகத் பாசிலை வைத்து 'பாச்சுவும் அற்புத விளக்கும்' என்கிற படத்தை இயக்கிய இயக்குனர் அகில் சத்யன் தான் இந்த படத்திற்கு கதை எழுதி இருக்கிறார். அவரும் இந்த சந்திப்பில் இவர்களுடன் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகியிருக்கிறது.

View this post on Instagram

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com