`திரிஷ்யம் 3' திரைப்படத்திற்கான டிரெய்லர் அப்பேட் கொடுத்த மோகன்லால்

மோகன்லால் நடித்த ‘திரிஷ்யம் 3’ திரைப்படம் வருகிற மே 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
`திரிஷ்யம் 3' திரைப்படத்திற்கான டிரெய்லர் அப்பேட் கொடுத்த மோகன்லால்
Published on

சென்னை,

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான படம் 'திரிஷ்யம்'. ரூ.5 கோடி செலவில் தயாரான இந்த படம் ரூ.75 கோடி வசூலித்து சாதனை நிகழ்த்தியது. இந்த படம் கமல்ஹாசன், கவுதமி நடிக்க 'பாபநாசம்' என்ற பெயரில் தமிழிலும் ரீமேக் செய்யப்பட்டது. தெலுங்கு, கன்னடம், இந்தி, சீன மொழிகளிலும் வெளியானது.

அதனை தொடர்ந்து 2021-ம் ஆண்டு 'திரிஷ்யம் 2' வெளியானது. நேரடியாக ஓடிடியில் வெளியான திரிஷ்யம் 2 முதல் பாகத்தை போல மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது 'திரிஷ்யம்' 3-ம் பாகம் உருவாகியுள்ளது. இந்த படத்தை ஆசீர்வாத் சினிமாஸ் சார்பில் ஆண்டனி பெரும்பாவூர் தயாரித்துள்ளார்.

‘திரிஷ்யம் 3’ திரைப்படம் வருகிற மே 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கிடையில் , இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான கவனத்தை அதிகரிக்க செய்தது. இப்படத்திற்கு தணிக்கை வாரியம் "யு/ஏ" சான்றிதழ் சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்த படத்தை 13வயத்திற்கும் மேற்பட்டோர் தியேட்டர்களில் கண்டு ரசிக்கலாம்.

இந்த நிலையில், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த திரிஷ்யம் 3 படத்திற்கான டிரெய்லர் குறித்த அப்டேட் நடிகர் மோகன்லால் வெளியிட்டுள்ளார். அதன்படி, வருகிற 9ந் தேதி (நாளை) மாலை டிரெய்லர் வெளியாகும் என்று அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com