மோகன்லாலின் 366வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

பிரபல மலையாள நடிகர் மோகன் லாலின் 366வது திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.
மோகன்லாலின் 366வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
Published on

‘துடரும்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அப்படத்தின் இயக்குநர் தருண் மூர்த்தி இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நாயகனாக நடிக்கும் 366 வது திரைப்படம் உருவாகி வருகின்றது.

இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இசையில் உருவாகும் மோகன்லாலின் பெயர் அறிவிக்கப்படாத இந்தப் புதிய படத்தை ஆஷிக் உஸ்மான் தயாரிக்கின்றார். மேலும், நடிகை மீரா ஜாஸ்மின் இப்படத்தில் நாயகியாக நடிப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தனது 366 ஆவது திரைப்படத்தில் நடிகர் மோகன்லால், டி.எஸ். லவ்லஜன் எனும் காவல் துறை அதிகாரியின் கதாபாத்திரத்தில் நடிப்பதாக, இன்றுபடக்குழு அறிவித்துள்ளது.

மோகன்லால் - ஷோபனா இருவரும் இணைந்து நடித்த ‘துடரும்’ படம் ரூ 231 கோடி வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com