

அனூப் சத்யன் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் 368வது படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது.
மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மோகன்லால், அடுத்தடுத்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது தேசிய விருது பெற்ற இயக்குனர் விஷ்ணு மோகன் இயக்கத்தில் ‘ஆப்ரேஷன் கங்கா’ படத்தில் நடித்துவருகிறார். இது மோகன்லாலின் 367வது படமாகும்.
துல்கர் சல்மான், கல்யாணி பிரியதர்ஷன், சுரேஷ் கோபி மற்றும் ஷோபனா ஆகியோர் நடிப்பில் கடந்த 2020ம் ஆண்டு வெளியானப் படம் ‘வரனே அவஷ்யமுண்டு’. இப்படத்தை இயக்கிய இயக்குநர் அனூப் சத்யன், தற்போது நடிகர் மோகன்லாலை வைத்து தனது இரண்டாவது படத்தை இயக்குகிறார்.
‘லாலேட்டன் 368’ என தற்காலிகமாக தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு கொச்சியில் இன்று பூஜையுடன் தொடங்கியது. ஆசிர்வாத் சினிமாஸ் நிறுவனம் சார்பில் ஆண்டனி பெரும்பாவூர், பினு ஜார்ஜ் அலெக்சாண்டருடன் இணைந்து படத்தை தயாரிக்கிறார்.
படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்தால், மோகன்லால் இப்படத்தில் ஒரு தந்தை கதாபாத்திரத்தில் நடிப்பது போல் தெரிகிறது. மோகன்லால் வெளியிட்டுள்ள போஸ்டரில் அவரது அருகில் இரு சிறுமிகள் அமர்ந்துள்ளனர்.