மோகன்லாலின் 5 படங்கள் ஓ.டி.டி.யில் வெளியாகிறது

தியேட்டர் அதிபர்களுடன் ஏற்பட்ட மோதலால் மோகன்லால் நடித்துள்ள புரோ டாடி, 12-த் மேன், அலோன் மற்றும் ஒரு படம் ஆகிய மேலும் 4 படங்கள் ஓ.டி.டியில் வெளியாக உள்ளது.
மோகன்லாலின் 5 படங்கள் ஓ.டி.டி.யில் வெளியாகிறது
Published on

தமிழில் சூர்யா, ஆர்யா, விஜய்சேதுபதி, நயன்தாரா, அனுஷ்கா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ள படங்கள் தியேட்டருக்கு பதிலாக ஓ.டி.டி. தளத்தில் வந்துள்ளன. இதுபோல் மலையாள படங்களும் ஓ.டி.டி.யில் வெளியாகி வருகின்றன. மோகன்லால், மீனா நடித்த திரிஷ்யம் 2-ம் பாகம் படம் ஓ.டி.டியில் வெளியாகி வரவேற்பை பெற்றதால் பிரிதிவிராஜ், பகத் பாசில் நடித்த படங்களும் பல சிறுபட்ஜெட் மலையாள படங்களும் ஓ.டி.டியில் வந்தன. இதுபோல் மோகன்லால் நடித்து பெரிய பட்ஜெட்டில் தயாராகி உள்ள சரித்திர படமான மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் படத்தையும் ஓ.டி.டியில் வெளியிடப்போவதாக அறிவித்து உள்ளனர்.

இந்த நிலையில் தியேட்டர் அதிபர்களுடன் ஏற்பட்ட மோதலால் மோகன்லால் நடித்துள்ள புரோ டாடி, 12-த் மேன், அலோன் மற்றும் ஒரு படம் ஆகிய மேலும் 4 படங்கள் ஓ.டி.டியில் வெளியாக உள்ளது. இந்த படங்களை தியேட்டர்களில் திரையிட்டு 21 நாட்களுக்கு பிறகு ஒ.டி.டியில் வெளியிட படக்குழுவினர் அனுமதி கேட்டதாகவும் திரையரங்கு உரிமையாளர்கள் அதனை ஏற்காமல் 80 நாட்களுக்கு பிறகே ஓ.டி.டிக்கு கொடுக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்ததால் தியேட்டருக்கு பதிலாக ஓ.டி.டியில் வெளியிடும் முடிவை எடுத்து இருப்பதாகவும் தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com