திரையரங்குகளில் வெளியாகும் “திரிஷ்யம் 2”

மோகன்லாலின் ‘திரிஷ்யம் 2’ திரைப்படம் வருகிற ஏப்ரல் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திரையரங்குகளில் வெளியாகும் “திரிஷ்யம் 2”
Published on

கடந்த 2013-ம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியான படம் ‘திரிஷ்யம்’. ரூ.5 கோடி செலவில் தயாரான இப்படம் ரூ.75 கோடி வசூலித்து சாதனை நிகழ்த்தியது. இந்த படம் கமல்ஹாசன், கவுதமி நடிக்க 'பாபநாசம்' என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. தெலுங்கு, கன்னடம், இந்தி, சீன மொழிகளிலும் வெளியானது. பின்னர் ‘திரிஷ்யம்’ படத்தின் இரண்டாம் பாகமும் வெளியானது. இது நேரடியாக ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தை ஜீத்து ஜோசப் இயக்கியிருந்தார்.

‘திரிஷ்யம்’ 3ம் பாகம் மலையாளம், இந்தி மொழிகளில் உருவாகியுள்ளது. இந்தி படத்தில் விஜய் சல்கோன்கராக அஜய் தேவ்கன், தபு, ஷ்ரியா சரண், இஷிதா தத்தா, ரஜத் கபூர் மற்றும் அக்சய் கண்ணா ஆகியோர் நடித்துள்ளனர். மலையாளத்தில் மோகன்லால் மற்றும் மீனா நடித்துள்ளனர். ஆசீர்​வாத் சினி​மாஸ் சார்​பில் ஆண்​டனி பெரும்​பாவூர் தயாரித்துள்ள இப்​படம் ஏப்ரல் 2-ம் தேதி வெளி​யா​வ​தாக அறிவிக்கப்பட்​டிருந்​தது. ஏப்ரல் 2ம் தேதி ‘திரிஷ்யம் 3’ படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மோகன்லால் பிறந்தநாளான மே 21ம் தேதி படம் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில், ‘திரிஷ்யம் 2’ திரைப்படம் வருகிற ஏப்ரல் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் கொரோனா காலத்தில் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியானது.

‘திரிஷ்யம் 3’ படத்தை காண்பதற்கு முன் திரையரங்க நினைவோட்ட அனுபவமாக இரண்டாம் பாகம் அமைய வேண்டும் என்பதற்காகவே தயாரிப்பு நிறுவனம் இம்முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com