7 நாட்களில் ரூ.200 கோடி வசூலித்த மோகன்லாலின் “திரிஷ்யம் 3”

மோகன்லால் நடித்த ‘திரிஷ்யம் 3’ திரைப்படம் கடந்த 21ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
7 நாட்களில் ரூ.200 கோடி வசூலித்த மோகன்லாலின் “திரிஷ்யம் 3”
Published on

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான படம் ‘திரிஷ்யம்3’. ரூ.5 கோடி செலவில் தயாரான இந்த படம் ரூ.75 கோடி வசூலித்து சாதனை நிகழ்த்தியது. இந்த படம் கமல்ஹாசன், கவுதமி நடிக்க 'பாபநாசம்' என்ற பெயரில் தமிழிலும் ரீமேக் செய்யப்பட்டது. தெலுங்கு, கன்னடம், இந்தி, சீன மொழிகளிலும் வெளியானது.

அதனை தொடர்ந்து 2021-ம் ஆண்டு ‘திரிஷ்யம் 2’ வெளியானது. நேரடியாக ஓடிடியில் வெளியான திரிஷ்யம் 2 முதல் பாகத்தை போல மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது ‘திரிஷ்யம்’ 3-ம் பாகம் உருவாகியுள்ளது. இந்த படத்தை ஆசீர்வாத் சினிமாஸ் சார்பில் ஆண்டனி பெரும்பாவூர் தயாரித்துள்ளார். ‘திரிஷ்யம் 3’ திரைப்படம் கடந்த 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

‘திரிஷ்யம் 3’ படம் முதல் நாள் பாக்ஸ் ஆபிசில் ரூ 50.35 கோடி வசூலித்திருப்பதாக படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில், ‘திரிஷ்யம் 3’ படம் 7 நாட்களில் ரூ.200 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தாண்டின் அதிகம் வசூலித்த மலையாளப் படம் பட்டியலில் இப்படம் இடம்பிடிக்கும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com