மோகன்லாலின் “திரிஷ்யம் 3” ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள ‘திரிஷ்யம் 3’ ஏப்ரல் 2ம் தேதி வெளியாகிறது.
மோகன்லாலின்  “திரிஷ்யம் 3” ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

கடந்த 2013-ம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியான படம் ‘திரிஷ்யம்’. ரூ.5 கோடி செலவில் தயாரான இப்படம் ரூ.75 கோடி வசூலித்து சாதனை நிகழ்த்தியது. இந்த படம் கமல்ஹாசன், கவுதமி நடிக்க 'பாபநாசம்' என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. தெலுங்கு, கன்னடம், இந்தி, சீன மொழிகளிலும் வெளியானது. பின்னர் ‘திரிஷ்யம்’ படத்தின் இரண்டாம் பாகமும் வெளியானது. இது நேரடியாக ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

‘திரிஷ்யம்’ 3ம் பாகம் மலையாளம், இந்தி மொழிகளில் உருவாகியுள்ளது. இந்தி படத்தில் விஜய் சல்கோன்கராக அஜய் தேவ்கன், தபு, ஷ்ரியா சரண், இஷிதா தத்தா, ரஜத் கபூர் மற்றும் அக்சய் கண்ணா ஆகியோர் நடித்துள்ளனர். மலையாளத்தில் மோகன்லால் மற்றும் மீனா நடித்துள்ளனர்.

இந்நிலையில், ‘திரிஷ்யம் 3’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் ஏப்ரல் 2ம் தேதி வெளியாக உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com