மோகன்லாலின் ‘திரிஷ்யம் 3’ படத்தின் புதிய போஸ்டர் வெளியிட்ட படக்குழு

மோகன்லால், இயக்குனர் ஜீத்து ஜோசப் கூட்டணியில் உருவாகியுள்ள ‘திரிஷ்யம் 3’ படம் மே 21ம் தேதி வெளியாகவுள்ளது.
மோகன்லாலின் ‘திரிஷ்யம் 3’ படத்தின் புதிய போஸ்டர் வெளியிட்ட படக்குழு
Published on

கடந்த 2013-ம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியான படம் ‘திரிஷ்யம்’. ரூ.5 கோடி செலவில் தயாரான இப்படம் ரூ.75 கோடி வசூலித்து சாதனை நிகழ்த்தியது. இந்த படம் கமல்ஹாசன், கவுதமி நடிக்க 'பாபநாசம்' என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. தெலுங்கு, கன்னடம், இந்தி, சீன மொழிகளிலும் வெளியானது. பின்னர் ‘திரிஷ்யம்’ படத்தின் இரண்டாம் பாகமும் வெளியானது. இது நேரடியாக ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தை ஜீத்து ஜோசப் இயக்கியிருந்தார்.

அதனை தொடர்ந்து 2022ம் ஆண்டு ‘திரிஷ்யம் 2’ வெளியானது. முதல் பாகத்தை போல இதுவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது ‘திரிஷ்யம்’ 3ம் பாகம் மலையாளம், இந்தி மொழிகளில் உருவாகியுள்ளது. இந்தி படத்தில் விஜய் சல்கோன்கராக அஜய் தேவ்கன், தபு, ஷ்ரியா சரண், இஷிதா தத்தா, ரஜத் கபூர் மற்றும் அக்சய் கண்ணா ஆகியோர் நடித்துள்ளனர். மலையாளத்தில் மோகன்லால் மற்றும் மீனா நடித்துள்ளனர். ஆசீர்​வாத் சினி​மாஸ் சார்​பில் ஆண்​டனி பெரும்​பாவூர் தயாரித்துள்ள இப்​படம் மே 21ம் தேதி வெளி​யா​க உள்ளது.

இந்நிலையில், ‘திரிஷ்யம் 3’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com