'ஆவேஷம்', 'ஆடு ஜீவிதம்' படங்களை பின்னுக்கு தள்ளிய 'தொடரும்'

அதிக வசூல் செய்த மலையாள படங்களின் பட்டியலில் 4-வது இடத்திற்கு 'தொடரும்' முன்னேறியுள்ளது.
Mohanlal's Thudarum beats Fahadh Faasil's Aavesham and Prithviraj's The Goat Life to become Malayalam cinema's 4th biggest hit
Published on

திருவனந்தபுரம்,

மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் மோகன்லால்தான் என்பதை மீண்டும் ஒருமுறை அவர் நிரூபித்துள்ளார். அவரது சமீபத்திய படமான 'தொடரும்' பாக்ஸ் ஆபீசில் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது. மலையாள சினிமா வரலாற்றில் 4-வது பெரிய ஹிட் படமாக இது மாறியுள்ளது.

கடந்த மாதம் 25-ம் தேதி வெளியான இப்படம் 14 நாட்களில் மலையாளத்தில் ரூ.87 கோடி வசூலித்து பகத் பாசிலின் 'ஆவேஷம்' மற்றும் பிருத்விராஜின் 'ஆடு ஜீவிதம்' ஆகிய படங்களில் வசூலை முந்தி அதிக வசூல் செய்த மலையாள படங்களின் பட்டியலில் 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

ஆவேஷம் படம் ரூ. 85.15 கோடியும் ஆடு ஜீவிதம் ரூ. 85 கோடியும் வசூலித்திருந்தது குறிப்பிடத்தக்கது. '2018', 'எல் 2: எம்புரான்' மற்றும் 'மஞ்சுமல் பாய்ஸ்' ஆகிய படங்கள் இந்த பட்டியலில் முதல் 3 இடங்களில் உள்ளன. இப்படம் தொடர்ந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், வரும் நாட்களில் ரூ. 100 கோடி வசூலை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com