பாக்ஸ் அபீசில் 'பிரேமலு'வை பின்னுக்கு தள்ளிய 'தொடரும்'


Mohanlals Thudarum becomes 8th biggest hit in Malayalam cinema, beating Naslens
x
தினத்தந்தி 7 May 2025 8:35 AM IST (Updated: 7 May 2025 8:40 AM IST)
t-max-icont-min-icon

மோகன்லாலின் 'தொடரும்' வருகிற 9-ம் தேதி தமிழில் வெளியாக உள்ளது.

திருவனந்தபுரம்,

மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் மோகன்லால்தான் என்பதை மீண்டும் ஒருமுறை அவர் நிரூபித்துள்ளார். அவரது சமீபத்திய படமான 'தொடரும்' பாக்ஸ் ஆபீசில் சாதனை படைத்துள்ளது. மலையாள சினிமா வரலாற்றில் எட்டாவது பெரிய வெற்றிப் படமாக இது மாறியுள்ளது.

கடந்த மாதம் 25-ம் தேதி வெளியான இப்படம் 12 நாட்களில் மலையாளத்தில் ரூ.77 கோடி வசூலித்து 'பிரேமலு'வின் ரூ.76 கோடி வசூலை முந்தி அதிக வசூல் செய்த மலையாள படங்களின் பட்டியலில் 8-வது இடத்தைப் பிடித்துள்ளது.

மலையாளத்தை தொடர்ந்து தமிழிலும் வசூலை குவிக்க 'தொடரும்' தயாராகி இருக்கிறது. அதன்படி, இப்படம் வருகிற 9-ம் தேதி தமிழில் வெளியாக உள்ளது. மேலும் பல படங்களின் சாதனையை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story