மோகன்லாலின் “விருஷபா” படத்தின் அப்டேட்

நந்தா கிஷோர் இயக்கத்தில் மோகன்லால் நடித்த ‘விருஷபா’ படம் அக்டோபர் 16-ம் தேதி வெளியாகிறது.
மோகன்லாலின் “விருஷபா” படத்தின் அப்டேட்
Published on

மோகன்லால் நடிக்கும் பான் இந்தியா படம், விருஷபா. இதை கன்னட இயக்குநர் நந்தா கிஷோர் எழுதி இயக்குகிறார். இதில் ரோஷன் மேகா, ஸ்ரீகாந்த் மேகா, ராகிணி திவேதி, நேகா சக்ஸேனா, சஹ்ரா எஸ் கான் உட்பட பலர் நடிக்கின்றனர். ஏ.வி.எஸ் ஸ்டுடியோ சார்பில் அபிஷேக் வியாஸ், பர்ஸ்ட் ஸ்டெப் மூவிஸ் சார்பில் ஷியாம் சுந்தர், பாலாஜி டெலிபிலிம்ஸ் சார்பில் ஏக்தா கபூர், கனெக்ட் மீடியாவுக்காக வருண் மாத்தூர் இணைந்து தயாரிக்கின்றனர். பிரம்மாண்டமான ஆக்ஷன் படமாக உருவாகும் இந்தப் படத்தின் மைசூர் படப்பிடிப்பில் 3000 துணை நடிகர்கள் பங்கேற்றுள்ளதாக நடிகை நேகா சக்ஸேனா தெரிவித்திருந்தார். நேகா சக்ஸேனா தமிழில், லொடுக்கு பாண்டி, ஒரு மெல்லிய கோடு, வன்முறை உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.

காதல், பழிக்கு பழி வாங்கும் உணர்வு என இரண்டு நேர் எதிர் உணர்ச்சிகளுக்கு இடையேயான மோதலை மையமாகக் கொண்ட விருஷபா திரைப்படம் உருவாகி வருவதாகத் தகவல். மேலும், பிரம்மாண்டமான ஆக்சன் என்டர்டெய்னராகவும், அப்பா- மகன் இடையிலான உறவை மையப்படுத்தியும் இப்படம் தயாராவதாகவும் கூறப்படுகிறது. சாம் சி.எஸ் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். படத்தின் டப்பிங் பணிகளை மோகன்லால் முடித்துள்ளார்.

இந்நிலையில், விருஷபா படத்தின் முக்கிய அறிவிப்பு நாளை வெளியாக உள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இது படத்தின் டிரெய்லராக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com