மீண்டும் வருகிறது ’மணி ஹெய்ஸ்ட்’ - நெட்பிளிக்ஸ் கொடுத்த மாஸ் அப்டேட்

'பெர்லின்’ சீசன் 2 மே 15-ம் தேதி ரிலீஸ் ஆகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் வருகிறது ’மணி ஹெய்ஸ்ட்’ -  நெட்பிளிக்ஸ் கொடுத்த மாஸ் அப்டேட்
Published on

சென்னை,

உலகப்புகழ் பெற்ற வெப் சீரிஸான 'மணி ஹெய்ஸ்ட்' (Money Heist) ரசிகர்களுக்கு நெட்பிளிக்ஸ் நிறுவனம் ஒரு மிகப்பெரிய இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது. ஐந்து சீசன்களுடன் இந்தத் தொடர் நிறைவடைந்தாலும், அதன் கதைக்களம் இத்துடன் முடிந்துவிடவில்லை என்பதை நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக நெட்பிளிக்ஸ் புரோமோ வெளியிட்டுள்ளது. புரொபசர் தலைமையிலான குழுவின் சாகசங்களை மீண்டும் காணப்போகும் ஆவலில் ரசிகர்கள் உள்ளனர். இதற்கான ஆரம்பக்கட்டப் பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாக தெரிகிறது.

இந்த மகிழ்ச்சிகரமான செய்தியோடு மற்றுமொரு அதிரடி அறிவிப்பாக, மணி ஹெய்ஸ்ட் தொடரின் ஸ்பின்-ஆப் (Spin-off) தொடரான 'பெர்லின்’(Berlin) சீசன் 2 மே 15-ம் தேதி ரிலீஸ் ஆகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com