'மூக்குத்தி அம்மன் 2' - படக்குழு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

'மூக்குத்தி அம்மன் 2' படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.
'Mookuthi Amman 2' - An Important Announcement Today at 6️ P.M
Published on

சென்னை,

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. தற்போது இவர், நிவின் பாலியுடன் 'டியர் ஸ்டூடண்ட்ஸ்' படத்திலும், யாஷ் நடிக்கும் 'டாக்சிக்' படத்திலும் நடித்து வருகிறார். இவர் கடந்த 2020-ம் ஆண்டு அம்மனாக நடித்திருந்த படம் 'மூக்குத்தி அம்மன்'.

ஆர்.ஜே. பாலாஜி இயக்கி நடித்திருந்த இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் மூலம்தான் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஆர்.ஜே. பாலாஜி. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, இதன் 2-ம் பாகம் உருவாக உள்ளது.

இந்த 2-ம் பாகத்திலும் நயன்தாராதான் அம்மனாக நடிக்க இருப்பதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்தது. இதனையடுத்து படம் தொடர்பான எந்த அறிவிப்பும் வெளியாகாமல்  இருந்தது. இந்நிலையில், படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.

அதன்படி, படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று தெரிவித்துள்ளது. இதனையடுத்து, ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com