'மூக்குத்தி அம்மன் 2' படப்பிடிப்பு நிறைவு


MookuthiAmman2 special glimps out
x

இப்படத்தை சுந்தர் சி இயக்குகிறார்.

சென்னை,

'மூக்குத்தி அம்மன் 2' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

2020ம் ஆண்டு ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த 'மூக்குத்தி அம்மன்' படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இப்படத்தில் நயன்தாரா மீண்டும் மூக்குத்தி அம்மனாக நடிக்கிறார்.

சுந்தர் சி இயக்கும் இப்படத்தில் நயன்தாராவுடன் ரெஜினா கசான்ட்ரா மற்றும் பலர் நடிக்கின்றனர். சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

இந்நிலையில், 'மூக்குத்தி அம்மன் 2' படத்திலிருந்து சிறப்பு வீடியோ வெளியாகி இருக்கிறது. அதில், படப்பிடிப்பு நிறைவடைந்தது எனவும் கோடையில் திரைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story