கார் விலையை விட அதிகம் பிரியங்கா சோப்ராவின் கைப்பை விலை ரூ.4 லட்சம்

இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா குவான்டிகா டி.வி தொடர் மூலம் ஹாலிவுட் பட வாய்ப்புகள் பெற்று உலக அளவில் பிரபலமாகி கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்.
கார் விலையை விட அதிகம் பிரியங்கா சோப்ராவின் கைப்பை விலை ரூ.4 லட்சம்
Published on

அமெரிக்காவில் உள்ள நடிகர்-நடிகைகள், பாடகர்கள், விளையாட்டு வீரர்களுடன் நெருக்கமாகி விருந்து, கொண்டாட்டம் என்று அதிக நாட்கள் அந்த நாட்டிலேயே இருக்கிறார்.

சமீபத்தில் அவரிடம் நேரில் சென்று பேசி வற்புறுத்தி சல்மான்கானுடன் பரத் என்ற படத்தில் ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த படத்துக்கு ரூ.12 கோடி சம்பளம் கேட்டு இருக்கிறார். அந்த தொகையை கொடுக்க படக்குழுவினரும் சம்மதித்து உள்ளனர்.

உலக புகழ் பெற்ற அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனாசுடன் பிரியங்கா சோப்ராவுக்கு நெருக்கம் ஏற்பட்டு இருவரும் ஜோடியாக சுற்றி வருகிறார்கள். பிரியங்கா சோப்ராவை விட நிக் ஜோனாஸ் 10 வயது குறைந்தவர். பணம், புகழ் என்று ஆடம்பரமாக வாழும் பிரியங்கா சோப்ரா இப்போது விலை உயர்ந்த கைப்பைகளுடன் நிகழ்ச்சிகளுக்கு செல்கிறார்.

ஒரு வாரத்தில் மட்டும் அவர் கையில் மூன்று வெவ்வேறு கைப்பைகள் வைத்து இருந்தார். ஒரு பை சிமெண்ட் நிறத்தில் இருந்தது. அந்த பையின் விலை ரூ.4.50 லட்சம். இன்னொரு நாள் விமான நிலையத்தில் வெறொரு கைப்பையுடன் சென்றார். அதன் விலை ரூ.4.50 லட்சம். மற்றொரு நாள் பூப்போட்ட கைப்பை ஒன்றை வைத்து இருந்தார். அதன் விலை ரூ.4 லட்சம் என்று மதிப்பிட்டனர்.

குறைந்த பட்சமாக குறிப்பிட்ட ஒரு காரின் விலை ரூ.3.5 லட்சத்துக்கும் இன்னொரு கார் ரூ.3.6 லட்சத்துக்கும் கிடைக்கிறது என்றும் அதைவிட விலை உயர்ந்த கைப்பைகளை பிரியங்கா சோப்ரா பயன்படுத்துகிறார் என்றும் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கருத்துக்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

பிரியங்கா சோப்ராவின் கைப்பைகளைப் பற்றித்தான் இந்தி பட உலகில் இப்போது பரபரப்பாக பேசப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com