சாய்பல்லவி படத்துக்கு வந்த சிக்கல் - படப்பிடிப்பு நிறுத்திவைப்பு

காப்புரிமை பிரச்சினையால் ராமாயணம் படத்துக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
More troubles! Ranbir Kapoor, Sai Pallavi’s movie shooting stopped
Published on

சென்னை,

நிதிஷ் திவாரி இயக்கத்தில் ராமாயணம் கதையை மையமாக வைத்து தயாராகும் புதிய படத்தில் ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி நடிக்கின்றனர். கன்னட நடிகர் யஷ் ராவணனாக வருகிறார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் அனுமானாக சன்னி தியோல், கும்பகர்ணனாக பாபிதியோல் நடிக்கின்றனர். ராமாயணம் படம் மூன்று பாகங்களாக தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாகிறது. சமீபத்தில் இப்படத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகின.

இந்தநிலையில், காப்புரிமை பிரச்சினையால் படத்துக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது. ராமாயணம் படத்துக்கான காப்புரிமை தங்களிடம் இருப்பதாகவும் அதை மீறி யாரும் படத்தை எடுக்க கூடாது என்றும் தயாரிப்பாளர் மது மண்டேனா எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக ராமாயணம் படக்குழுவினருக்கு நோட்டீசும் அனுப்பி உள்ளார். இதனால் ராமாயணம் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு உள்ளது. இது திரைப்பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com