பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததாக இணையத்தில் பரவல் - மவுனம் கலைத்த நடிகை மவுனி ராய்

நாகினி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் மவுனி ராய்.
சென்னை,
பாலிவுட் சினிமாவில் நட்சத்திர நடிகையாக வலம் வருபவர் மவுனி ராய். இவர் நாகினி என்ற இந்தி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.
சீரியலை தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடிக்க தொடங்கிய மவுனி ராய், முன்னணி நடிகைகளில் ஒருவராக இளைஞர்களின் மனதில் இடம் பிடித்தார். தற்போது இவர் சஞ்சய் தத்துடன் 'தி பூத்னி' படத்தில் நடித்துள்ளார்.
இதற்கிடையில், நடிகை மவுனி ராய் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததாக இணையத்தில் தகவல்கள் பரவி வந்தன. இதற்கு எந்த பதிலும் தெரிவிக்காமல் இருந்து வந்த மவுனி தற்போது மவுனம் கலைத்துள்ளார்.
அதன்படி, முகத்தை மறைத்துக்கொண்டு மோசமான கருத்துகளை வெளியிட்டு மகிழ்ச்சி காண்பவர்களை பற்றி தனக்கு கவலையில்லை என்று கூறினார். மவுனி ராய் நடித்துள்ள 'தி பூத்னி' படம் அக்சய் குமாரின் 'கேசரி 2' உடன் வருகிற 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.






