21 வயதில்...வாய்ப்பு தருவதாக கூறி முத்தமிட்ட இயக்குனர் - பிரபல நடிகை பகிர்ந்த அதிர்ச்சி தகவல்


Mouni Roy recalls shocking incident of misbehaviour in Bollywood at 21 that scarred her: ‘The man held my face and…’
x
தினத்தந்தி 2 Jan 2026 3:14 PM IST (Updated: 2 Jan 2026 3:16 PM IST)
t-max-icont-min-icon

சீரியல்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த இவர், இப்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

சென்னை,

நடிப்பில் ஆர்வத்துடன் திரைத்துறையில் நுழையும் அனைவரும் சிறந்து விளங்க முடியாது. தங்கள் தொழில் வாழ்க்கையின் தொடக்கத்தில், அவர்கள் பல சீரியல்களில் சிறிய வேடங்களில் நடித்து பிரபலமடைகிறார்கள். மேலே உள்ள நடிகையும் ஆரம்பத்தில் சீரியல்களிலும் சிறிய வேடங்களில் நடித்தவர்தான்.

சீரியல்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த இவர், இப்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் யார் என்று தெரிகிறதா? அவர் வேறு யாருமல்ல. பாலிவுட் நடிகை மவுனிராய்தான்.

நாகினி சீரியல் மூலம் ஒரே இரவில் நட்சத்திரமாக மாறியவர் மவுனிராய். தற்போது இவர் சிரஞ்சீவியின் விஸ்வம்பராவில் ஒரு சிறப்புப் பாடலில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், மவுனிராய் தான் சந்தித்த ஒரு கசப்பான அனுபவத்தை பற்றி பகிர்ந்துகொண்டார். அவர் ஒரு நேர்காணலில் பேசுகையில், "எனக்கு 21-22 வயது இருக்கும். அப்போது ஒரு இயக்குனர் என்னை அவரது அலுவலகத்திற்கு அழைத்து, படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறினார். நான் சென்றேன். ஆனால், அவர் திடீரென்று கதை சொல்வதுபோல் என்னை முத்தமிட்டார். அந்த சம்பவம் என்னை மிகவும் பாதித்தது ," என்றார்.


1 More update

Next Story