ஐட்டம் பாடலில் கவனம் ஈர்த்த ரஜிஷா விஜயன் - வைரல்

இதுவரை இயல்பான வேடங்களில் நடித்துவந்த ரஜிஷா, இந்தப் பாடலில் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளார்.
சென்னை,
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘கர்ணன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கவனம் பெற்ற நடிகை ரஜிஷா விஜயன்.
இதனைத் தொடர்ந்து, மீண்டும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான ‘பைசன்’ படத்தில் துருவ் விக்ரமுக்கு அக்காவாகவும், பசுபதிக்கு மகளாகவும் நடித்திருந்தார். இந்தப் படத்திலும் குடும்பப் பெண்ணாக அவர் வெளிப்படுத்திய நடிப்பு பாராட்டுகளை பெற்றது.
மேலும், சூர்யா நடித்த ‘ஜெய் பீம்’ மற்றும் கார்த்தி நடித்த ‘சர்தார்’ ஆகிய படங்களில் நடித்திருந்தார். இந்நிலையில், மலையாள இயக்குநர் கிரிஷாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மஸ்திஸ்கா மரணம்’ என்ற படத்தில் இடம்பெற்றுள்ள ‘கோமல தாமரா’ என்ற ஐட்டம் பாடலில் ரஜிஷா விஜயன் கவர்ச்சியான குத்தாட்டம் ஆடியுள்ளார்.
இதுவரை இயல்பான மற்றும் கதைக்கள முக்கியத்துவம் கொண்ட வேடங்களில் மட்டுமே நடித்துவந்த ரஜிஷா, இந்தப் பாடலில் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளார். இந்த பாடல் வெளியானதிலிருந்து சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.






