ஜூன் மாதம் திரைக்கு வரும் முக்கிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள்

ஜூன் மாதம் முக்கிய நட்சத்திரங்களின் படங்கள் ரிலீஸ் ஆக இருக்கின்றன.
சென்னை,
அடுத்த மாதம் (ஜூன்) பல திரைப்படங்கள் திரைக்கு வரவுள்ளன. அதிலும் குறிப்பாக முக்கிய நட்சத்திரங்களின் படங்கள் ரிலீஸ் ஆக இருக்கின்றன. கமல்ஹாசனின் 'தக் லைப்', பவன் கல்யாணின் 'ஹரி ஹர வீரமல்லு', தனுஷின் 'குபேரா' மற்றும் விஷ்ணு மஞ்சுவின் 'கண்ணப்பா' ஆகிய படங்களாகும்.
இந்த படங்களை பற்றி தற்போது காண்போம்.
1. தக் லைப்
36 வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'தக் லைப்'. இப்படத்தில் நடிகர் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் மற்றும் பாலிவுட் நடிகர் அலி பசல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் இப்படம் வருகிற ஜூன் 5-ம் தேதி திரைக்கு வருகிறது.
2. ஹரி ஹர வீரமல்லு
பவன் கல்யாண் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் 'ஹரி ஹர வீர மல்லு'. ஜோதி கிருஷ்ணா இயக்கி உள்ள இந்த படத்தில் நிதி அகர்வால் கதாநாயகியாக நடித்துள்ளார்.
கீரவாணி இசை அமைத்திருக்கும் இப்படம் ஜூன் 12ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரு பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது.
3. குபேரா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷ், தற்போது இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் 'குபேரா' படத்தில் நடித்துள்ளார். இதில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ராஷ்மிகா, ஜிம் சரப் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வருகிற ஜூன் 20-ம் தேதி வெளியாக உள்ளது.
4. கண்ணப்பா
தெலுங்கில் வரலாற்று புதினத்தை தழுவி உருவாகி இருக்கும் ஆன்மிக திரைப்படம் 'கண்ணப்பா'. இத்திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு கண்ணப்பர் வேடத்தில் நடித்துள்ளார். மேலும், மோகன்லால், பிரபாஸ், காஜல் அகர்வால், அக்சய் குமார், பிரீத்தி முகுந்தன், மோகன்பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
இத்திரைப்படம் வரும் ஜூன் மாதம் 27ம் தேதி தமிழ் , தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் , கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரு பான் இந்தியா திரைப்படமாக வெளியாகவுள்ளது.






