இந்த வாரம் தியேட்டரில் வெளியாகும் படங்கள் (30.01.2026)

இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் வெளியாக உள்ளன என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

இந்த வாரம் தியேட்டரில் வெளியாகும் படங்கள் (30.01.2026)
Published on

சென்னை,

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான கதைகளில் புதுப்புது திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் இந்த வாரம் வருகிற 30ந் தேதி தியேட்டர்களில் 4 திரைப்படங்கள் வெளியாக உள்ளன. அவை என்னென்ன என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

லாக் டவுன்

லைகா நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ள லாக் டவுன் திரைப்படத்தில் நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் ஏஆர் ஜீவா இயக்கியுள்ளார். இந்த படத்தில் சார்லி, நிரோஷா, பிரியா வெங்கட், லிவிங்ஸ்டன், இந்துமதி, ராஜ்குமார், ஷாம்ஜி, லொள்ளு சபா மாறன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு என்ஆர் ரகுநந்தன் மற்றும் சித்தார்த் விபின் இசையமைத்துள்ளனர்.

கருப்பு பல்சர்

இயக்குனர் முரளி கிரிஷ் இயக்கத்தில் நடிகர் அட்டகத்தி தினேஷ் நடித்துள்ள படம் கருப்பு பல்சர். இப்படத்தில் ரேஷ்மா, மன்சூர் அலிகான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜல்லிக்கட்டையும் மதுரையும் மையமாக வைத்து உருவாகியுள்ளது.

க்ராணி

இயக்குனர் விஜயகுமாரன் இயக்கத்தில் வடிவுக்கரசி நடித்துள்ள படம் க்ராணி. இப்படத்தில் சிங்கம் புலி, திலீபன், ஜீவி அபர்ணா, கஜராஜ், ஆனந்த் நாக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சீ.டா. பாண்டியன் இசையமைத்துள்ளார். ஹாரர் திரில்லராக உருவாகி உள்ள இந்த திரைப்படத்தை விஜயா மேரி யுனிவர்சல் மீடியா'ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜயா மேரி தயாரித்து உள்ளார்.

திரைவி

முனிஷ் காந்த், அசோக், ஆஷ்னா சவேரி, நிழல்கள் ரவி, சரவண சுப்பையா, ராட்சஷன் சரவணன், வினோத் சாகர் ஆகியோரின் நடிப்பில் உருவாகி உள்ள படம் "திரைவி. கார்த்தி தட்சிணாமூர்த்தி இயக்கியிருக்கும் திரைவி படத்தை நித்தி கிரியேட்டர்ஸ் சார்பில் பி. ராஜசேகரன் தயாரித்துள்ளார்.

காந்தி டாக்ஸ்

இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பலேகர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'காந்தி டாக்ஸ்'. இதில் விஜய் சேதுபதி, அரவிந்த் சுவாமி, அதிதி ராவ் ஹைதாரி மற்றும் சித்தார்த் ஜாதவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com