

நடிகர் ரஜினிகாந்த் அதிக முறை ரூ. 500 கோடிக்கும் அதிகமாக வசூலித்த நடிகர்களின் பட்டியலில் இணைந்துள்ளார்.
கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான 'அபூர்வ ராகங்கள்' திரைப்படம் மூலமாக ரஜினிகாந்த் சினிமாவில் அறிமுகமானார். 'அபூர்வ ராகங்கள்' திரைப்படம் 1975-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ந்தேதி வெளியானது. இந்த 50 ஆண்டுகளில் ரஜினிகாந்த் நடிப்பில் இதுவரை 172 திரைப்படங்கள் வெளியாகி உள்ளன.
ஐந்து தசாப்த சினிமா வாழ்க்கையில் பல வெற்றி படங்களை கொடுத்து மக்கள் மனதில் இன்றும் நீங்காத இடத்தை பிடித்துள்ளார் ரஜினிகாந்த். 75 வயதிலும் உச்சத்தில் இருக்கும் நடிகராக வலம் வருகிறார். திரை உலகில் சூப்பர் ஸ்டாராக உயர்ந்து, இருமுறை பத்ம விபூஷன் விருது, திரையுலகின் உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருது உட்பட பல்வேறு விருதுகளை வாங்கியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் தற்போது தனது 173-வது திரைப்படமான ‘தர்மன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை 'ஓ மை கடவுளே', 'டிராகன்' ஆகிய படங்களின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கி வருகிறார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படம் ஆக்சன் கதைக்களத்தில் உருவாகி வருகிறது.
இந்திய சினிமா வரலாற்றில் அதிக முறை ரூ. 500 கோடி வசூலித்த நடிகர்கள் பட்டியலில் தற்போது ரஜினியும் இணைந்துவிட்டார். 2.0, ஜெயிலர், கூலி, ஜெயிலர் 2 என நான்கு ரூ. 500 கோடி வசூல் திரைப்படங்களைக் கொடுத்து பல பாலிவுட் நடிகர்களுக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார்.
தங்கல், சீக்ரெட் சூப்பர்ஸ்டார், பிகே, தூம் 3 என நான்கு ரூ. 500 கோடி வசூல் திரைப்படங்களை கொடுத்துள்ளார்.
பாகுபலி, பாகுபலி 2, சலார், கல்கி ஏடி என நான்கு ரூ. 500 கோடி வசூல் திரைப்படங்களை கொடுத்துள்ளார்.
பதான், ஜவான் ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே ஷாருக்கானின் ரூ. 500 கோடிக்கும் அதிகமாக வசூலித்த திரைப்படங்கள்.
விஜய்யின் ‘லியோ’ படம் மட்டுமே ரூ.500 கோடி வசூலித்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால் சூப்பர் ஸ்டார் நான்கு ரூ. 500 கோடி வசூல் திரைப்படங்களைக் கொடுத்து விஜய்க்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.
ரஜினிகாந்த் இன்றும் வசூல் சக்ரவர்த்தியாக வலம் வருவது இந்திய சினிமாவுக்கே ஆச்சரியத்தைக் கொடுத்து வருகிறது என்றால் மிகையல்ல. ரஜினியின் திரைப்படங்களிலேயே அதிகம் வசூலித்த திரைப்படமாக ‘ஜெயிலர் 2’ மாற உள்ள சூழலில் இந்த புதிய சாதனை ரஜினி ரசிகர்களிடம் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. ‘ஜெயிலர் 2’ படம் ரூ.1000 கோடி வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.