எம்.ஆர். பாரதியின் “ட்ரீம் கேர்ள்” பட டிரெய்லர் வெளியானது

இயக்குநர் எம்.ஆர். பாரதியின் ‘ட்ரீம் கேர்ள்’ படம் காதலர் நாளான பிப்ரவரி 14 ஆம் தேதியில் வெளியாகிறது.
எம்.ஆர். பாரதியின் “ட்ரீம் கேர்ள்” பட  டிரெய்லர் வெளியானது
Published on

இயக்குநர் எம்.ஆர். பாரதி எழுதி. இயக்கிய ‘ட்ரீம் கேர்ள்’ படத்தில் நாயகனாக ஜீவா நடித்துள்ளார். நாயகியாக பிரபல ஸ்டண்ட் நடிகர் ஜெஸ்டின் பேத்தியும் நடிகை பபிதாவின் மகளுமாகிய ஹரிஷா ஜெஸ்டின் நடித்திருக்கிறார். பிரபு சாஸ்தா, துருவன், இந்திரா ஆகியோரும் நடித்துள்ளனர்.காதல் கதையாக உருவாகியுள்ள ‘ட்ரீம் கேர்ள்’, வெறும் 20 நாள்களிலேயே ரூ. 7 லட்சத்துக்குள்ளாக எடுக்கப்பட்டதாக இயக்குநர் கூறியுள்ளார்.

பாலு மகேந்திராவின் ‘அழியாத கோலங்கள்’ என்ற கிளாசிக் திரைப்படத்தை, அவரின் ஞாபகமாக 2019 ஆம் ஆண்டு ‘அழியாத கோலங்கள் 2’ என்ற பெயரில் மீண்டும் எழுதி இயக்கியவர்தான் எம்.ஆர்.பாரதி.

சினிமா இயக்குநராக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் நாயகனுக்கும், பாடகியாக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் நாயகிக்கும் இடையிலான காதலைக் காட்டுவதாக இப்படம் வரவிருக்கிறதாம். . கதாநாயகனும் கதாநாயகியும் தங்கள் கனவுகளைத் துரத்துவதைக் காட்டும் ‘ட்ரீம் கேர்ள்’ படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக ஊட்டியிலேயே எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ‘ட்ரீம் கேர்ள்’ படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குநர் எம்.ஆர். பாரதியின் ‘ட்ரீம் கேர்ள்’ படம் காதலர் நாளான பிப்ரவரி 14 ஆம் தேதியில் வெளியாகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com