'டக்கோயிட்: எ லவ் ஸ்டோரி' படப்பிடிப்பின் போது மிருணாள் தாகூருக்கு காயம்


டக்கோயிட்: எ லவ் ஸ்டோரி படப்பிடிப்பின் போது மிருணாள் தாகூருக்கு காயம்
x

டகோயிட்: எ லவ் ஸ்டோரி’ படம் டிசம்பர் 25 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

அதிவி சேஷ் கதாநாயகனாக நடிக்கும் ஆக்சன் காதல் படமான "டகோயிட்எ லவ் ஸ்டோரி" என்ற படத்தில் நடிகை மிருணாள் தாகூர் நடித்து வருகிறார். இதில் அதிவி சேஷுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்க இருந்தார். ஆனால், கூலி படப்பிடிப்பில் அவர் பிஸியாக இருந்ததால், இப்படத்திற்கு போதுமான நேரம் ஒதுக்க முடியவில்லை. இதனால், ஸ்ருதிஹாசன் இப்படத்தில் இருந்து விலகினார். பின்னர், அவருக்கு பதிலாக மிருணாள் தாகூர் சேர்க்கப்பட்டார்.

தமிழ், இந்தி உள்பட ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கிறது. இதில் அனுராக் காஷ்யப், பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடிக்கின்றனர்.டகோயிட் படம் டிசம்பர் 25 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் படப்பிடிப்பின் போது எதிர்பாராதவிதமாக நடந்த விபத்தில் ஆத்வி சேஷுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அதே காட்சியில் நடித்துக் கொண்டிருந்த மிருணாள் தாகூருக்கும் சிறு காயம் ஏற்பட்டது. இவர்கள் இருவருக்கும் முதலுதவி சிகிச்சை அளித்து, மருத்துவமனையில் சேர்த்தனர். இருவரையும் மருத்துவர்கள் ஓய்வு எடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர்.

1 More update

Next Story