திருமண வதந்திகளுக்கு நடிகை மிருணாள் தாக்கூர் விளக்கம்

தனுஷும் நடிகை மிருணாள் தாகூரும் காதலித்து வருவதாகவும், இருவருக்கும் பிப்ரவரி 14ஆம் தேதி திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் தகவல்கள் பரவின.
திருமண வதந்திகளுக்கு நடிகை மிருணாள் தாக்கூர் விளக்கம்
Published on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ், தெலுங்கு மற்றும் பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். இவர் 2004 ஆம் ஆண்டு ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்தார். அவர்களுக்கு தற்போது இளம் வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், கடந்த 2024ஆம் ஆண்டு தனுஷும் ஐஸ்வர்யாவும் திருமண வாழ்க்கையிலிருந்து பிரிவதாக அறிவித்தனர்.

கடந்த சில மாதங்களாக தனுஷும் நடிகை மிருணாள் தாகூரும் காதலித்து வருவதாக செய்திகள் வலம் வந்த வண்ணம் உள்ளன. சில நிகழ்ச்சிகளில் அவர்கள் இருவரும் ஒன்றாகக் காணப்பட்டனர். ஒரு பேட்டியில் மிருணாள் தாகூர், தனுஷ் என்னுடைய சிறந்த நண்பர் என்றும் தெரிவித்திருந்தார். பாலிவுட் திரையுலகில் நடித்து வந்த மிருணாள் தாகூருக்கு சீதா ராமம் படம் நல்ல பிரபலத்தை தென்னிந்திய சினிமாவில் ஏற்படுத்தி கொடுத்தது.

தனுஷும் மிருணாள் தாகூரும் காதலர் தினத்தை முன்னிட்டு வருகிற பிப்ரவரி 14ஆம் தேதி திருமணம் செய்துகொள்ளப்போவதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், திருமண வதந்தி குறித்து மிருணாள் தாகூர் மனம் திறந்து பேசியிருக்கிறார். அவர் சமீபத்தில் கொடுத்திருந்த ஒரு பேட்டியில், “நான் திருமணம் செய்துகொள்ளப்போகிறேனா?. இல்லவே இல்லை. பிப்ரவரி 14ஆம் தேதி ஏப்ரல் ஒன்றாம் தேதி மாதிரி மாறியிருக்கிறது. எனக்கு திருமணம் என்று யார் ஆரம்பித்தது என தெரியவில்லை. இது இப்போது ரொம்பவே பயம் ஏற்படுத்துவதாக இருக்கிறது. மிருணாள் தாகூர் அதிகாரப்பூர்வமாக திருமணத்தை உறுதி செய்துவிட்டார் என்றெல்லாம் பொய்யாக வதந்தி பரப்புகிறார்கள்” என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com