‘புதிய ஸ்கிரிப்ட், புதிய ஆரம்பம்’ - வைரலாகும் மிருணாள் தாகூரின் பதிவு

மிருணாள் தாகூர் தற்போது தனது பட பணியில் முழு கவனம் செலுத்தி வருகிறார்.
சென்னை,
நடிகை மிருணாள் தாகூர், சமீபத்தில் நடிகர் தனுஷுடன் தொடர்புபடுத்தி பரவிய திருமண வதந்தியில் சிக்கினார். இருவரும் பிப்ரவரி 14-ம் தேதி திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இருப்பினும், நடிகைக்கு நெருக்கமானவர்கள் இந்த வதந்தியை தெளிவாக மறுத்து, அது முற்றிலும் பொய்யானது என்று தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, மிருணாள் தாகூர் தற்போது தனது பட பணியில் முழு கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், அவர் இன்ஸ்டாகிராமில் ஒரு சுவாரஸ்யமான அப்டேட்டை பகிர்ந்துள்ளார். தனது ஸ்டோரியில், “புத்தாண்டு, புதிய ஸ்கிரிப்ட், புதிய ஆரம்பம்” என்று பதிவிட்டு, தற்போது தாம் ஐதராபாத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவை பார்த்த ரசிகர்கள், இது அல்லு அர்ஜுன் – அட்லீ கூட்டணியில் உருவாகும் படத்துக்கான அப்டேட்டாக இருக்கலாம் என்றும், சிலர் இது மிருணாள் தாகூரின் புதிய திரைப்படம் குறித்த அப்டேட் எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.






