''சன் ஆப் சர்தார் 2'' - அஜய் தேவ்கனுடன் இணைந்த மிருணாள் தாகூர்

''சன் ஆப் சர்தார் 2'' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக அவர் அறிவித்துள்ளார்.
சென்னை,
மிருணாள் தாகூர், ''சன் ஆப் சர்தார் 2'' படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.
பல வகையான கதைகளில் தனது கவர்ச்சிகரமான நடிப்பிற்காகப் பெயர் பெற்ற மிருணாள் தாகூர், தற்போது காதல் நகைச்சுவைத் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
அதன்படி, தனது சமூக ஊடகங்கத்தில் ''சன் ஆப் சர்தார் 2'' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக அவர் அறிவித்துள்ளார். இதனை மிருணாள் தற்போதுதான் தெரிவித்திருந்தாலும் , அவர் ஏற்கனவே படப்பிடிப்பை தொடங்கி இருக்கிறார்.
இப்படத்தில் அவர் அஜய் தேவ்கனுடன் திரையைப் பகிர்ந்து கொள்கிறார் என்பதை அறிந்த அவரது ரசிகர்கள் இப்போது இன்னும் உற்சாகமாக உள்ளனர்.
இந்த படத்தை விஜய் குமார் அரோரா இயக்குகிறார் மற்றும் தேவ்கன் பிலிம்ஸ் தயாரிக்கிறது. படத்தை பற்றிய மேலும் விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story