''திருமணம் செய்து... அதுதான் என் கனவு'' - மனம் திறந்த மிருணாள் தாகூர்


Mrunal Thakur opens up about marriage, kids, and career priorities
x
தினத்தந்தி 26 July 2025 11:53 AM IST (Updated: 26 July 2025 1:36 PM IST)
t-max-icont-min-icon

தனது முழு கவனமும் தற்போது திரைத்துறை வாழ்க்கையில் உள்ளதாக மிருணாள் தாகூர் கூறினார்.

சென்னை,

பட புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகை மிருணாள் தாகூர் தனது திருமணம் குறித்த சுவாரசியமான தகவல்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் மிருணாள் தாகூர். பாலிவுட்டில் பல படங்களில் நடித்து கதாநாயகியாக நல்ல வரவேற்பை பெற்ற இவர், தெலுங்கிலும் அதே அளவு புகழைப் பெற்றுள்ளார்.

''சீதாராமம்'' படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமான இவர், சீதாவாக ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இந்தப் படத்திற்குப் பிறகு, ''பேமிலி ஸ்டார்'', ''ஹாய் நன்னா'' போன்ற படங்களில் நடித்து மேலும் புகழ் பெற்றார்.

தற்போது இவர் அதிவி சேஷ் ஹீரோவாக நடிக்கும் ''டகோயிட்'' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. இதற்கிடையில் மிருணாள், அஜய் தேவ்கனுடன் ''சன் ஆப் சர்தார் 2'' படத்தில் நடித்துள்ளார்.

இந்த படம் ஆகஸ்ட் 1-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், பெரிய அளவிலான புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நடிகை மிருணாள் தாகூர் தனது திருமணம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

திருமணம் செய்து கொள்வதும், தாயாக மாறுவதும் தனது சிறுவயதிலிருந்தே கனவு என்று அவர் கூறினார். இருப்பினும், தனது முழு கவனமும் தற்போது திரைத்துறை வாழ்க்கையில்தான் உள்ளது என்பதையும் அவர் வெளிப்படுத்தினார்.


1 More update

Next Story