ஓ.டி.டி.யில் வெளியாகும் 'முபாசா : தி லயன் கிங்'

ஜியோ ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாகும் 'முபாசா: தி லயன் கிங்' படம்.
ஓ.டி.டி.யில் வெளியாகும் 'முபாசா : தி லயன் கிங்'
Published on

1994 மற்றும் 2019-ம் ஆண்டில் 'தி லயன் கிங்' என்ற பெயரில் காட்டுக்கே ராஜாவான சிங்கத்தை வைத்து 2 படங்கள் வெளியாகின. இந்த லயன் கிங் படத்திற்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. காட்டு விலங்களுக்கு இடையே உள்ள பொறாமை, வஞ்சம், சூழ்ச்சி, போராட்டம், பந்தம் , காதல், தலைமை என அனைத்து குணாதிசயங்களை காட்டி இருப்பது இப்படத்திற்கு கூடுதல் அம்சமாகும்.

இந்நிலையில், பேரி ஜென்கின்ஸ் இயக்கத்தில் பிரம்மாண்டமான பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் முபாசா : தி லயன் கிங். இந்த படம் சூழ்ச்சியால் கொலை செய்யப்படும் சிம்பாவின் தந்தை முபாசா கடந்து வந்த பாதையை வைத்து உருவாகியுள்ளது. அரச குடும்பத்தை சாராது, அனாதையாக வளர்ந்து தனக்கான ஆட்சியை உருவாக்கும் முபாசாவின் கதை மெய்சிலிர்க்க வைக்கிறது. இப்படம் உலக அளவில் ரூ.3,500 கோடி வசூல் செய்துள்ளது.

இந்த நிலையில் தற்போது இப்படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் வருகிற 26-ந் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com