'முபாசா: தி லயன் கிங்' படத்தின் டிரெய்லர் வெளியானது

பேரி ஜென்கின்ஸ் இயக்கியுள்ள 'முபாசா: தி லயன் கிங்' படத்தின் டிரெய்லர் தற்பொழுது வெளியாகியுள்ளது.
'முபாசா: தி லயன் கிங்' படத்தின் டிரெய்லர் வெளியானது
Published on

காட்டுக்கே ராஜாவான சிங்கத்தை வைத்து இதுவரையில் 2 லயன் கிங் படங்கள் வந்துள்ளது. 1994 -ம் ஆண்டில் ஒன்றும், 2019-ம் ஆண்டில் மற்றொன்றும் வெளியானது. இரண்டிலும் ஒரே கதைதான்.1994-ம் ஆண்டு வெளிவந்தப் படம் கார்டூன் டெக்னாலஜியில் இருக்கும், 2019-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் புது டெக்னாலஜியான அனிமேஷன் தொழில்நுட்பத்தில் அமைந்து இருக்கும்.

லயன் கிங் படத்திற்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சிம்பாவை தூக்கி அனைத்து காட்டு விலங்களுக்கும் காட்டும் காட்சி இன்னும் சமூகவலைத்தளங்களில் வலம் வந்து கொண்டுதான் உள்ளது. பொறாமை, வஞ்சம், சூழ்ச்சி, போராட்டம், பந்தம் , காதல், தலைமை என அனைத்து குணாதிசயங்களை காட்டு விலங்குகளின் மூலம் கடத்திருப்பது இப்படத்திற்கு கூடுதல் அம்சம்.

இந்நிலையில், சூழ்ச்சியால் கொலை செய்யப்படும் சிம்பாவின் தந்தை முபாசா கடந்து வந்த பாதையை வைத்து உருவாகியுள்ளது முபாசா : தி லயன் கிங் படம். பேரி ஜென்கின்ஸ் இப்படத்தை இயக்கியுள்ளார்.

அரச குடும்பத்தை சாராது, அனாதையாக வளர்ந்து தனக்கான ஆட்சியை உருவாக்கும் முபாசாவின் கதை மெய்சிலிர்க்க வைக்கிறது. தற்பொழுது படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

View this post on Instagram

இப்படம் வருகிற டிசம்பர் 20-ம் தேதி வெளியாகவுள்ளது. லயன் கிங் படத்தின் ரசிகர்கள் மத்தியில் முபாசா: தி லயன் கிங் படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு உண்டாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com