பல கோடி மோசடி; ஆட்களை வைத்து மிரட்டல்" அதர்வா மீது பகீர் புகார்

6.10 கோடி ரூபாய் மோசடி செய்ததாக நடிகர் அதர்வா மீது தயாரிப்பாளர் மதியழகன் குற்றம்சாட்டியுள்ளார்.
பல கோடி மோசடி; ஆட்களை வைத்து மிரட்டல்" அதர்வா மீது பகீர் புகார்
Published on

சென்னை,

இது குறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் அளிக்கப்பட்டுள்ள புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது,

நடிகர் அதர்வா ரூபாய் 6.10 கோடி மோசடி செய்துள்ளார். அவர் நடித்துள்ள 'செம்ம போதை ஆகாது ' படத்தின் விநியோகஸ்தர் உரிமையை 5 கோடி ரூபாய்க்கு நான் பெற்றுள்ளேன். ஆனால் படம் வெளியாக தாமதம் ஆனதால் எனக்கு நட்டம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அதர்வாவிடம் கேட்ட போது முறையாக பதிலளிக்கவில்லை. இது சம்பந்தமாக தயாரிப்பாளர் சங்கத்தில் ஏற்கனவே புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தயாரிப்பாளர் சங்கத்தின் உத்தரவுகளை அவர் மதிப்பதில்லை.

அவரிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் நட்டத்திற்கு ஈடாக மற்றொரு படம் நடித்து தருவதாக கூறினார். அதனால் ரூபாய் 50 லட்சம் செலவில் மின்னல் வீரன் என்னும் படம் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதிலும் அதர்வா நடிக்காமல் ஏமாற்றினார், இதனால் எனக்கு 6.10 கோடி ரூபாய் வரை நட்டம் ஏற்பட்டது. மேலும் 4 ஆண்டுகளாக பணம் தராமல் ஏமாற்றி வருகிறார். அவரை அழைத்து பேசினால் அரசியல்வாதிகளை வைத்து மிரட்டுவதாகவும் மதியழகன் புகாரளித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com