60 வயது நடிகருடன் திருமணமா...? பிரபல நடிகை பரபரப்பு தகவல்!

தனக்கும் நரேசுக்கும் இடையில் இருப்பது வெறும் நட்பு மட்டும்தான் என நடிகை பவித்ரா கூறியுள்ளார்.
60 வயது நடிகருடன் திருமணமா...? பிரபல நடிகை பரபரப்பு தகவல்!
Published on

மைசூரு

தென்னிந்திய சினிமாவில் பிரபல குணச்சித்திர நடிகையாக வலம் வருபவர் நடிகை பவித்ரா . தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளிலும் 200க்கும மேற்பட்ட படங்களில் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார்.

ஏற்கனவே சுசீந்திர பிரசாத் என்பவரை திருமணம் செய்த பவித்ரா கடந்த 6 ஆண்டுகளாக கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் பழம்பெரும் தெலுங்கு நடிகரான கிருஷ்ணாவின் மகனும் நடிகர் மகேஷ் பாபுவின் அண்ணனுமான நரேஷ் பாபுவை பவித்ரா திருமணம் செய்து கொண்டார்.

நரேஷ் பாபுவும் பவித்ராவும் ஓட்டலில் ஒரே அறையில் தங்கியிருந்த போது நரேஷ் பாபுவின் மனைவி ரம்யா ரகுபதி அவர்கள் இருவரையும் கையும் களவுமாக பிடித்து செருப்பால் அடித்தார். அதோடு நடிகை பவித்ரா பணத்துக்காக தனது கணவரை நான்காவதாக திருமணம் செய்து கொண்டு குடும்பத்தில் குழப்பம் ஏற்படுத்துகிறார் என்றும் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்நிலையில் ரம்யாவின் குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள பவித்ரா, தான் நான்காவதாக திருமணம் செய்யவில்லை என கூறியுள்ளார். மேலும் தனக்கு இதுவரை விவாகரத்து நடைபெறவில்லை என்று கூறியுள்ள பவித்ரா,தனக்கும் நரேசுக்கும் இடையில் இருப்பது வெறும் நட்பு மட்டும்தான் என கூறியுள்ளார்.

நரேஷின் மனைவி தன் மீது வேண்டுமென்றே பழி போடுவதாகவும், தனக்கும் நரேசுக்கும் 4 ஆண்டுகளாக பழக்கம் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். தான் இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பதாகவும், இருவரும் சேர்ந்து 4, 5 படங்களில் நடித்துள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் தனது கணவர் சுசீந்திர பிரசாத்தை திருமணம் செய்யும் போது அவரிடம் பணம் இல்லை, வீடு இல்லை, கார் இல்லை, ஆனாலும் அவருடன் 11 வருடங்கள் வாழ்ந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அவரை பிரிந்த பிறகும் தங்களுக்குள் கடந்த 6 ஆண்டுகளாக நல்ல நட்பு இருந்து வருவதாகவும் தெரிவித்துள்ள பவித்ரா, நரேஷின் அறிமுகம் கிடைக்கும் போது அவர் மகேஷ் பாபுவின் சகோதரர் என்று தனக்கு தெரியாது எனவும் தெரிவித்துள்ளார். படத்தில் ஒன்றாக பணியாற்றும் போதுதான் நரேஷும் தானும சொந்த விஷயங்களை பகிர்ந்து கொண்டதாகவும் வீட்டில் யாரும் இல்லை அவர் கூறியதாகவும் தெரிவித்துள்ளார் பவித்ரா.

ரம்யா தேவையில்லாமல் அவரது குடும்ப பிரச்சினையில் தன்னை இழுப்பதாகவும் இதுவரை ரம்யா ரகுபதியை நேரில் பார்த்தது கூட இல்லை என்றும் பவித்ரா தெரிவித்துள்ளார். மேலும் தனது கணவரிடம் இருந்து தான் விவாகரத்து பெறுவது தன்னுடைய பிரச்சினை என்றும் அதை தானே பார்த்துக்கொள்வேன் என்றும் கூறியுள்ளார். மேலும் சமூக வலைதளங்களில் தன்னை பற்றி பரவும் வதந்திகள் தொடர்பாக சைபர் கிரைம்மில் புகார் அளித்துள்ளதாகவும் பவித்ரா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பவித்ராவின் கணவர் சுசேந்திர பிரசாத் கூறியதாவது:-

தனது மனைவி பவித்ராவுடன் திருமணமாகி 16 வருடங்கள் ஆகிறது . எங்கள் திருமணம் இந்து திருமண சட்டப்படி நடைபெற்றது. எங்களது திருமண உறவில் பிறந்த இரண்டு குழந்தைகள் உள்ளனர். பவித்ரா மீது எனக்கு மரியாதை உள்ளது, மேலும் தனது மனைவி குறித்த இந்த வதந்திகளுக்கு பின்னால் யாரோ இருப்பதாக சந்தேகிப்பதாக கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com