தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் மும்பை மாடல் அழகி மதுமிதா தாஸ்

மும்பையைச் சேர்ந்த மாடல் அழகியான மதுமிதா தாஸ் கதாநாயகியாக அறிமுகமாகி உள்ளார்.

தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் மும்பை மாடல் அழகி மதுமிதா தாஸ்
Published on

சென்னை,

டி.அந்தோணி தயாரித்து, இயக்கி நடித்த 'ஏன் என்னை ஏதோ செய்தாய்' என்ற படத்தின் மூலம் மாடல் அழகியான மதுமிதா தாஸ் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

கதாநாயகியாக அறிமுகமாகும் மாடல் அழகி

மும்பையில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்து சாதித்த நடிகைகள் அதிகம். அந்தவகையில் மும்பையைச் சேர்ந்த மாடல் அழகியான மதுமிதா தாஸ், தமிழில் 'ஏன் என்னை ஏதோ செய்தாய்' என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இந்தப் படத்தை டி.அந்தோணி தயாரித்து, இயக்குவதுடன், கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இந்த படத்தில் ஜீவா ரவி, ரெஜின் ரோஸ், நவ்யா, ஆலம்ஷா, மாதங்கி உள்பட பலரும் நடித்துள்ளனர்.

எனக்கு ரசிகர்கள் ஆதரவுக்கரம் நீட்டுவார்கள்

சென்னையில் நடந்த பட விழாவில் மதுமிதா தாஸ் பேசும்போது, “என் மீது நம்பிக்கை வைத்த படக்குழுவுக்கு நன்றி. பொதுவாக அதிகம் பேசப்படாத ஒரு கதாபாத்திரத்தை மையமாக வைத்து நடித்திருப்பது சவாலான அனுபவமாக இருந்தது. நிறைய உழைப்பைக் கொடுத்திருக்கிறேன். எனக்கு ரசிகர்கள் ஆதரவுக்கரம் நீட்டுவார்கள், அங்கீகாரம் தருவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன். நல்ல படங்களுக்கு ஊக்கம் தாருங்கள்", என்றார்.

மாறுபட்ட ரொமான்ஸ் காதல் கதை

அந்தோணி கூறும்போது, "சிறுவயதிலேயே தாயை இழந்த கதாநாயகன் இருட்டு உலகில் வாழ்க்கையைக் கழிக்கிறான். அவனது வாழ்க்கையில் நுழையும் காதல் அவனை மீட்டதா, இல்லையா? என்பதே கதை. காதலைப் புதுமையான பாணியில் சொல்லியிருக்கிறேன். இது ஒரு மாறுபட்ட ரொமான்ஸ் காதல் கதையாக இருக்கும். விரைவில் படம் திரைக்கு வருகிறது". என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com