ஷில்பா ஷெட்டியின் கணவர் மொபைலில் 119 ஆபாச வீடியோக்கள் ; ரூ.9 கோடிக்கு விற்க திட்டம்

ஆபாச வீடியோ வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவின் செல்போனிலிருந்து 119 ஆபாச வீடியோக்கள் கைப்பற்றப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஷில்பா ஷெட்டியின் கணவர் மொபைலில் 119 ஆபாச வீடியோக்கள் ; ரூ.9 கோடிக்கு விற்க திட்டம்
Published on

மும்பை

ஆபாச படம் எடுத்து அதை செல்போன் செயலியில் பதிவேற்றம் செய்து பணம் சம்பாதித்ததாக கடந்த ஜூலையில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரது நிறுவனத்தின் தொழில்நுட்ப பிரிவின் அதிகாரியும் கைது செய்யப்பட்டார்.

சிறையில் அடைக்கப்பட்டு இருந்த குந்த்ராவுக்கு 2 மாதம் கழித்து நேற்று மும்பை ஐகோர்ட் ஜாமீன் வழங்கியது.

ஆபாச வழக்கில் தனது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு ஜாமீன் வழங்கப்பட்ட சில நிமிடங்களில், நடிகை ஷில்பா ஷெட்டி தனது சமூக வலைத்தளத்தில் ஒரு மோசமான புயலுக்குப் பிறகு அழகான விஷயங்கள் நடக்கலாம் என்பதை நிரூபிக்க வானவில் உள்ளன என கூறி இருந்தார்.

தற்போது வழக்கு விசாரணையில் புதிய திருப்பமாக குந்த்ராவின் செல்போன், லேப்டாப் மற்றும் ஹார்ட் டிரைவ் ஆகியவற்றிலிருந்து சுமார் 119 ஆபாச படங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக மும்பை போலீசார் தெரிவித்து உள்ளனர்.

மேலும், இந்த வீடியோக்களை ரூ.9 கோடிகளுக்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டிருந்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com