திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகருக்கு மும்பை போலீஸ் சம்மன்

மோசடி வழக்கில் மும்பை போலீசார் ரவீந்தர் சந்திரசேகரை கைது செய்யாமல் சம்மன் கொடுத்து சென்றுள்ளனர்.
மும்பை,
நட்புனா என்னன்னு தெரியுமா, நளனும் நந்தினியும், முருங்கைக்காய் சிப்ஸ், லிப்ட் உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் ரவீந்தர் சந்திரசேகர். கடந்த 2022-ம் ஆண்டு சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டார். இவர் சமீபத்தில் வெளியான டிராகன் படத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில், பங்குச் சந்தையில் அதிக லாபம் பெற்றுத் தருவதாக மும்பையில் அஜய் ஜெகதீஷ் கபூர் என்பவரிடம் ரூ.5.24 கோடி மோசடி செய்ததாக ரவீந்தர் சந்திரசேகரை கைது செய்ய மும்பை போலீசார் சென்னை வந்தனர். ஆனால் மும்பை போலீசார் ரவீந்தர் சந்திரசேகரின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரை கைது செய்யாமல் சம்மன் கொடுத்து சென்றுள்ளனர்.
இம்மோசடி புகாரில் கைதான ரோகன் என்பவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ரவீந்தருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
Related Tags :
Next Story






