‘டார்க் காமெடி' படத்தில் கதாநாயகனாக களமிறங்கும் முனீஸ்காந்த்


‘டார்க் காமெடி படத்தில் கதாநாயகனாக களமிறங்கும் முனீஸ்காந்த்
x
தினத்தந்தி 8 Sept 2025 2:50 PM IST (Updated: 9 Sept 2025 1:14 PM IST)
t-max-icont-min-icon

எழுத்தாளர் லோகேஷ் குமார் இயக்கும் புதிய படத்தில் முனீஸ்காந்த் ஹீரோவாக நடிக்கிறார்.

சென்னை,

‘சூது கவ்வும்', ‘முண்டாசுப்பட்டி', ‘ஜிகர்தண்டா', ‘டார்லிங்-2', ‘மாநகரம்', ‘டிடி ரிட்டன்ஸ்', ‘கேங்கர்ஸ்' போன்ற பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்தவர், முனீஸ்காந்த்.

நகைச்சுவையில் அசத்தி வந்த முனீஸ்காந்த் தற்போது கதாநாயகனாகிவிட்டார். எழுத்தாளர் லோகேஷ் குமார் இயக்கும் புதிய படத்தில் அவர் ஹீரோவாக நடிக்கிறார். கிராமத்து பின்னணியில் முழுமையான ‘டார்க் காமெடி' படமாக தயாராகிறது.

இதுகுறித்து லோகேஷ்குமார் கூறும்போது, ‘‘எளியவர்களுக்கு எளிதாக கிடைக்கும் கந்து வட்டி எப்படி அவர்களின் கழுத்தை நெருக்குகிறது? என்பதே கதைக்களம். சிரிப்போடு, சிந்திக்க வைக்கும் வகையில் இப்படத்தை உருவாக்கி வருகிறோம். முனீஷ்காந்துடன் ருத்ரன் பிரவீன், ஷாதிகா, மவுரிஷ் தாஸ், அஷ்வின், நாகராஜ் உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள்.

முதல்கட்ட படப்பிடிப்பு மதுரை வாடிபட்டியில் நடந்துள்ளது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. படத்தின் தலைப்பு உள்ளிட்ட விவரங்கள் விரைவில் வெளியாகும்'', என்றார்.

1 More update

Next Story