முனீஸ்காந்த்தின் “மிடில் கிளாஸ்” பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது

முனீஸ்காந்த் நடித்துள்ள ‘மிடில் கிளாஸ்’ படம் வருகிற 21ந் தேதி வெளியாக உள்ளது.
Published on

சென்னை,

சூது கவ்வும்', முண்டாசுப்பட்டி', ஜிகர்தண்டா', டார்லிங்-2', மாநகரம்', டிடி ரிட்டன்ஸ்', கேங்கர்ஸ்' போன்ற பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்தவர், முனீஸ்காந்த். நகைச்சுவையில் அசத்தி வந்த முனீஸ்காந்த் தற்போது 'மிடில் கிளாஸ்' என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கியுள்ள இப்படத்தினை தேவ் மற்றும் கே.வி.துரை இணைந்து தயாரித்திருக்கிறார்கள். மிடில் கிளாஸ் தம்பதிகளாக முனிஷ்காந்த் மற்றும் விஜயலட்சுமி நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் காளி வெங்கட், ராதா ரவி, குரேஷி, மாளவிகா அவினாஷ், கோடங்கி வடிவேலு மற்றும் வேல ராமமூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர், டிரெய்லர் மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இந்த நிலையில், மிடில் கிளாஸ் படத்தின் தேன்கூடே பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. சூர்யா பாரதி வரிகளில் ஷான் ரோல்டன், சுப்லஷ்ஷினி இப்பாடலை பாடியுள்ளனர். இப்படம் வருகிற 21ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com