முனீஸ்காந்தின் “த டோர்ம்” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

முனீஸ்காந்த் நடிக்கும் ‘தி டோர்ம்’ படத்திற்கு ஷாம் விஷால் மற்​றும் செபாஸ்​டியன் ரொஸாரியோ ஆகியோர் இணைந்து இசையமைத்​துள்​ளனர்.
முனீஸ்காந்தின் “த டோர்ம்” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
Published on

தீபா ஸ்ரீதர் இயக்​கும் ‘தி டோர்ம்’ படத்தில் முனீஸ்காந்த் கதை​யின் நாயக​னாக நடித்​துள்​ளார்.

‘சூது கவ்வும், முண்டாசுப்பட்டி, ஜிகர்தண்டா, டார்லிங்-2, மாநகரம், டிடி ரிட்டன்ஸ், கேங்கர்ஸ்’ போன்ற பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்தவர், முனீஸ்காந்த். நகைச்சுவையில் அசத்தி வந்த முனீஸ்காந்த் சமீபத்தில் ‘மிடில் கிளாஸ்’ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அறி​முக இயக்​குநர் தீபா ஸ்ரீதர் இயக்​கத்​தில் உரு​வாகி​யுள்ள படம் ‘தி டோர்ம்’. இதில் முனீஸ்காந்த் கதை​யின் நாயக​னாக நடித்​துள்​ளார். மேலும் சபரீஷ், அருண் கார்த்​தி, சாம் ஜான், நிகில் நாயர், ஷாலினி காசித்​தங்​கம், வசுந்​தரா ஸ்ரீநாத், சிந்​து, பெரோஜ் என பலர் நடித்​திருக்​கிறார்​கள். இளை​ய​ராஜா முரு​கேசன் ஒளிப்​ப​திவு செய்​திருக்​கும் இப்​படத்துக்கு ஷாம் விஷால் மற்​றும் செபாஸ்​டியன் ரொஸாரியோ ஆகியோர் இணைந்து இசையமைத்​துள்​ளனர்.

குட் ஸ்டப் புரொடக்சன்ஸ் சார்​பில் ஈ.ஆர்.டில்லி பலராமன் மற்​றும் ஜெகதீஸ்​வரன் டில்லி இணைந்து தயாரித்​துள்​ளனர். இப்​படத்​தின் அனைத்து பணி​களும் முடிவடைந்த நிலையில் பர்​ஸ்ட் லுக் வெளி​யிடப்​பட்​டுள்​ளது. இதை விஜய் சேதுபதி அவருடைய டிவிட்டர் தளத்தில் வெளி​யிட்​டு, படக்​குழு​வினருக்கு வாழ்த்து தெரி​வித்​துள்​ளார். இத்திரைப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் மற்றும் டீசர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com