''தமிழ் படங்கள் ரூ.1,000 கோடி வசூலிக்காததற்கு இதுதான் காரணம்'' - ஏ.ஆர்.முருகதாஸ்


Murugadoss on 1000-Cr Films
x

தமிழ் படங்கள் ரூ.1,000 கோடி கிளப்பில் நுழையத் தவறியதற்கு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை,

இதற்கு முன்பு பல வெற்றி படங்களை இயக்கியுள்ள ஏ.ஆர்.முருகதாஸ், சமீபத்தில் தொடர் தோல்விகளைச் சந்தித்து வருகிறார். இவர் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து மதராஸி படத்தை இயக்கி இருக்கிறார். இப்படம் அடுத்த மாதம் 5 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் புரமோஷனின்போது பேசிய அவர், தமிழ் படங்கள் ரூ.1,000 கோடி கிளப்பில் நுழையத் தவறியதற்கு விளக்கம் அளித்தார்.

அதன்படி, மற்ற மொழி படங்கள் ரூ.1,000 கோடிக்கு மேல் வசூல் செய்கின்றன என்றும், அந்த திரைப்படத்துறை இயக்குனர்கள் பொழுதுபோக்குக்காக மட்டுமே படம் செய்கிறார்கள் என்றும், ஆனால், தமிழ் இயக்குனர்கள் படத்தின் மூலம் கல்வி கற்பிக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.

அதனால்தான் மற்ற திரைப்படத் துறைகளுக்கும் தமிழ் திரைப்படத் துறைக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது என்று இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கூறினார்.

பிற மொழி படங்கள் ரூ.1,000 கோடி கிளப்பில் ஏற்கனவே நுழைந்திருக்கும்நிலையில், தமிழ் படங்கள் இன்னும் அதை செய்யவில்லை. ரஜினிகாந்த் நடித்த 'கூலி' திரைப்படம் வெளியாவதற்கு முன்பு அந்த சாதனையை படைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், வெளியான பின்பு கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

1 More update

Next Story