“மதராஸி” படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்த அனிருத்


“மதராஸி” படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்த அனிருத்
x
தினத்தந்தி 5 Sept 2025 6:43 PM IST (Updated: 6 Sept 2025 1:13 AM IST)
t-max-icont-min-icon

இசையமைப்பாளர் அனிருத் மதராஸி படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

சென்னை,

தமிழ் சினிமாவில் அனைவராலும் கொண்டாடப்படும் நடிகர் சிவகார்த்திகேயன் பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23-வது படமான ‘மதராஸி’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைத்திருக்கிறார். இப்படம் வருகிற செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ‘மதராஸி’ படம் டிரெய்லர் வெளியாகி வைரலானது. ‘மதராஸி’ படத்தின் டிரெய்லர் யூடியூபில் பல மொழிகளை சேர்த்து 18 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை கடந்துள்ளது.

‘மதராஸி’ திரைப்படத்திற்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. படத்தின் பாடல்களும் இசை வெளியீட்டு விழாவில் வெளியிடப்பட்டது. ‘மதராஸி’ படத்தின் டிரெய்லர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சிவகார்த்திகேயன் மற்றும் ருக்மிணி கோயம்பத்தூர், கொச்சி, ஐதராபாத் என பல இடங்களில் புரோமோஷன் செய்தனர்.

இந்நிலையில், இசையமைப்பாளர் அனிருத் சிவகார்த்திகேயன், ஏ.ஆர். முருகதாஸ் உடன் இருக்கும் புதிய புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.குறிப்பாக ரசிகர்களுக்கு நன்றியும் ‘மதராஸி’ படக்குழுவுக்கு வாழ்த்துகளும் தெரிவித்துள்ளார்..

1 More update

Next Story