டி20 உலக கோப்பை தொடருக்கு பாடல் இசையமைக்கும் அனிருத்

ஐசிசி உலக கோப்பைக்கான அதிகாரபூர்வ பாடல் விரைவில் வரும் என்று அனிருத் கூறியுள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் வருகிற பிப்ரவரி 7ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரில் பங்கேற்கும் வீரர்கள் பட்டியலை அனைத்து நாடுகளும் அறிவித்துவிட்டன.
தமிழ் , தெலுங்கு சினிமாவை தாண்டி இந்தியிலும் முன்னணி இசையமைப்பாளராக் இருந்து வருபவர் அனிருத். இவர் தற்போது தமிழில், ரஜினியின் ‘ஜெயிலர் 2’ படத்திற்கும், இந்தியில் ஷாருக்கானின் ‘தி கிங்’ படத்திற்கும் இசையமைத்து வருகிறார்.
டி20 உலகக் கோப்பைக்கான புதிய பாடலை உருவாக்கும் வாய்ப்பு அனிருத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோவை அனிருத் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “கிரிக்கெட் சாதாரணமான போட்டி மட்டுமே கிடையாது. அது ஒரு உணர்வு. ஐசிசியின் ஆடவர் டி20 உலகக் கோப்பையில் பங்கு வகிப்பதற்கு மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். 20 நாடுகள், ஒரே சப்தம், நிஜமான திரில்லர் உடன் ஆட்டத்தைப் பார்க்கலாம். ஐசிசி உலகக் கோப்பைக்கான அதிகாரபூர்வ பாடல் விரைவில் வரும்” என்றார்.






