இசையமைப்பாளர் அனிருத் பிறந்தநாள்; 'எல்.ஐ.கே.' படத்தில் இருந்து முதல் பாடல் வெளியீடு

அனிருத் பிறந்தநாளை முன்னிட்டு பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள 'எல்.ஐ.கே.' படத்தில் இருந்து முதல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
இசையமைப்பாளர் அனிருத் பிறந்தநாள்; 'எல்.ஐ.கே.' படத்தில் இருந்து முதல் பாடல் வெளியீடு
Published on

சென்னை,

'லவ் டுடே' படத்தை இயக்கி நடித்த பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' (எல்.ஐ.கே.) இந்த படத்தை தமிழ் சினிமாவில் 'போடா போடி' என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான விக்னேஷ் சிவன் இயக்குகிறார். இவர் கடைசியாக 'காத்து வாக்குல ரெண்டு காதல்' என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். மேலும் எஸ்.ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றன.

இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியாகி வைரலானது.

இந்த நிலையில், இன்று இசையமைப்பாளர் அனிருத் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு, எல்.ஐ.கே. படத்தில் இருந்து 'தீமா' என்ற பாடல் இன்று வெளியாகி உள்ளது. இந்த பாடலை அனிருத் பாடியுள்ளார். பாடல் வரிகளை விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். யூடியூபில் வெளியாகியுள்ள இந்த பாடல் தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com