இசையமைப்பாளர் தேவாவின் சகோதரர் காலமானார்

சமுத்திரம், மாயாண்டி குடும்பத்தார் உள்ளிட்ட படங்களுக்கு தேவாவின் சகோதரர் சபேஷ் இசையமைத்துள்ளார்.
இசையமைப்பாளர் தேவாவின் சகோதரர் காலமானார்
Published on

சென்னை,

தமிழ் சினிமாவின் புகழ் பெற்ற இசையமைப்பாளர்களில் ஒருவர் தேவா. இவரது சகோதரர்களான சபேஷ் மற்றும் முரளி ஆகியோர் சேர்ந்து சபேஷ்-முரளி என்ற இரட்டை இசையமைப்பாளர் குழுவாக பல படங்களுக்கு இசையமைத்துள்ளனர். மேலும் இவர்கள் தேவாவின் திரைப்படங்களில் இசை உதவி பணிகளையும் செய்துள்ளனர்.

இந்நிலையில் தேவாவின் சகோதரர் சபேஷ் இன்று காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த சபேஷ், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சமுத்திரம், மாயாண்டி குடும்பத்தார், தவமாய் தவமிருந்து, பொக்கிஷம் உள்ளிட்ட படங்களுக்கு சபேஷ் இசையமைத்துள்ளார். சமீபத்தில் தனது சகோதரர் தேவா தேசிய விருது பெறாதது குறித்து சபேஷ் வருத்தம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com