‘டீசல்’ படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் கொடுத்த ரிவ்யூ

கடந்த 17-ம் தேதி வெளியான டீசல் படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
Music composer G.V. Prakash's review of the film 'Diesel'
Published on

சென்னை,

ஹரிஷ் கல்யாண் கெரியரில் அதிக பட்ஜெட்டில் உருவான படம் டீசல். இப்படத்தை சண்முகம் முத்துச்சாமி இயக்கியுள்ளார். இப்படத்தில் அதுல்யா ரவி, வினய், சாய் குமார், அனன்யா, கருணாஸ், விவேக் பிரசன்னா, சச்சின் கேதேகர், ஜாகீர் உசேன், தங்கதுரை, கேபிஒய் தீனா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கடந்த 17-ம் தேதி வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தை பார்த்த இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் ரிவ்யூ கொடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், நேற்று டீசல் திரைப்படம் பார்த்தேன். சமூக அக்கறையோடு சொல்லப்பட்ட நல்லதொரு படம்.குழுவினரின் உழைப்பு பாராட்டுக்குரியது என்று தெரிவித்திருக்கிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com